பூகோள பரப்பிலே ஓடும்நீர், பனிக்கட்டியாறு, கடலலை, காற்று, தரைக்கீழ்நீர் என பலதரப்பட்ட புறவிசை காரணிகள் காணப்படுகின்றபோது அவற்றில் பனிக்கட்டியாறு முனைவு பகுதியில் காணப்பட கடலையானது கடற்கரையில் காணப்பட, காற்று பாலைவனத்திலும், தரைக்கீழ் நீர் சுண்ணக்கல் வளமுடைய பிரதேசத்தில் பரந்துள்ளது.
ஆனால் மாறாக ஓடும் நீரானது சிற்சில தனித்துவமான பிரதேசங்கள் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக அயனவலயம், முனைவு வலயம், இடைவெப்ப வலயம் பின்றவற்றில் வியாபித்து தனது தின்னல் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாக மேற்பரப்பு பிராந்தியத்தில் பல்வேறுபட்ட விதமான நிலவுருவங்களை தோற்றுவித்த காரணத்தினால் இதனை ''சாதாரண தின்னல் நிலவுருவம்'' என அழைத்துக்கொள்ளுவார்கள்.
ஓடும் நீரினுடைய தின்னல் செயற்பாடுகளை பிரதானமாக நான்கு வகையாக வகைப்படுத்தி கொள்ளலாம். அவையாவன நீரியற் தாக்கம், அரித்தல் அல்லது தேய்தல், கரைசல், அரைந்து தேய்தல் போன்றனவாகும். அவற்றினை நாங்கள் விரிவாக பார்க்குமிடத்து ஆரம்ப நிலை ஓட்டத்தின்போது மலைப்பாங்கான பிரதேசங்களில் இருந்து நதியானது நகர்ந்து வருகையில் கொண்டுவருகின்ற பருப்பொருட்களினுடைய அளவு மிக குறைவாக காணப்படுவதனால் ஆற்றின் வேகம் அபரிவிதமான போக்கில் நகர்ந்து வரும். அங்கு அந்த நீரின் தாக்கத்தினால் வெடிப்புக்கள் ஏற்படுத்தப்படும் பொது அதனை நீரியற் தாக்கம் என அழைப்பார்கள்.
நதி நகர்ந்து வரும் போது பள்ளத்தாக்கினுடைய இரு மருங்கிலும் மிருதுவான சுரண்டலை ஏற்படுத்தி கொண்டுவரும்போது அதனையே அரித்தல் செயன்முறை என அழைப்பார்கள்.
பாறைப்படைத்தளங்கள் ஊடாக ஆறானது நகர்ந்து வருகின்ற போது அங்குள்ள கல்சியம் போன்ற பல்வேறு கனிமங்களை கரைநத்து கொண்டு வருகையில் அந்த செயன்முறையினை கரைசல் செயற்பாடு என அழைத்துக்கொள்ளுவார்கள்.
நீரியல் தாக்கம், கரைசல் போன்ற செயன்முறைகளின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களை நதியானது தன் போக்கில் நகர்த்துகின்ற போது தன்னோடும் தன்னுடைய தளத்தோடும் அரைந்து தேய்த்து கொண்டு செல்கின்றபோது அதனையே அரைந்து தேய்தல் என அழைத்துக்கொள்ளுவார்கள்.


No comments:
Post a Comment